நடிகை இஷா கோபிகர் வயது குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இஷா கோபிகர் 1998ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கவிதை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். விஜய்யின் ஜோடியாக ‘நெஞ்சினிலே’ திரைப்படத்தில் இஷா கோபிகர் நடித்துள்ளார். அரவிந்த் சுவாமியுடன் ‘என் சுவாசக் காற்றே’, விஜயகாந்தின் ‘நரசிம்மா’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர். ‘ஜோடி’ மற்றும் ‘அயலான்’ திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள இவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டா பக்கத்தில் வயது குறித்து அவர் ஒரு ஆழமான கருத்துகளை பதிவிட்டிருக்கிறார். அவர் இந்தியில் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் “இது வியப்பாக இல்லையா, ஆணுக்கு வயதானால் அனுபவம், பெண்ணுக்கு வயதானால் அது பிரச்னை. திரைப்படங்களிலும் கதாநாயகன்கள், தங்களை விட வயதில் பாதிக்கும் குறைவான வயதுள்ள கதாநாயகிகளுடன் நடனமாடுகிறார்கள். அவர்கள்தான் அந்த நாயகியின் கதாநாயகன், இது மிகவும் இயல்பாக நடக்கிறது. ஆனால், ஒரு பெண் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினாலோ, ஸ்டைலாக இருந்தாலோ, உங்கள் வயதை கருத்தில் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், இந்த நேரத்தில் சொல்வது ஒன்றுதான், பெண்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் மிகவும் ஆழமானவர்கள். அவர்களது நம்பிக்கை சப்தமாக கேட்காது, அவரது முகத்தில் இல்லை, அவரது அழகு, அவரது வாழ்க்கைப் பயணத்தில் உள்ளது. முகச் சுருக்கம் அவரது வயதைக் காட்டவில்லை, அவரது வாழ்க்கையின் போராட்டங்களைத்தான் காட்டுகின்றன. ஒரு வயதான பெண்ணின் வாழ்க்கையில் அவரது காயங்களையும் அதனை அவர் எவ்வாறு ஆற்றினார் என்பதையும் பாருங்கள். அனைவருக்குமே வயதாகும். எனவே, யாரையும் வயதான பெண் என்பதால் அவமரியாதை செய்யாதீர்கள், மரியாதைக்கு முடிவுறும் தேதி இல்லை” என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு இவருக்கு டிம்மி நரங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்தார் இஷா கோபிகர். தற்போது மகளுடன் வசித்து வருகிறார். சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இஷா கோபிகர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/when-a-man-gets-old-its-experience-when-a-woman-gets-old-its-a-problem-actress-isha-koppikar




