திருச்சூர், சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து திடீரென விலகிய நடிகர் தேவன், மக்களுக்காக பல்வேறு தொண்டுகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார் என நடிகை பிரியங்கா தெரிவித்துள்ளார். திடீரென விலகிய தேவன் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் தேவன். இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அரசியலிலும் ஈடுபட்டு வந்த தேவன், பா.ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து நடிகர் தேவன் திடீரென விலகினார். இதனால் அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. த.வெ.க.வில் இணைந்தார் இதற்கிடையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் தேவன் இணைந்துள்ளார். த.வெ.க.வின் முக்கிய பிரமுகர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள தேவனின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேவன் த.வெ.க.வில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நடிகை பிரியங்காவும் உடனிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்” இதுகுறித்து பேசிய நடிகை பிரியங்கா, நடிகர் தேவன் மக்களுக்காக பல்வேறு தொண்டுகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாக கூறினார். ஆனால், பா.ஜனதாவில் இருந்தபோது அவரால் அதை எதிர்பார்த்த அளவுக்கு திறம்பட செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது தமிழக முதல்-அமைச்சர் விஜய் மக்களுக்கான நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருவதாகவும், அதேபோன்ற பணிகளை கேரளத்திலும் மேற்கொள்ளும் நோக்கில் நடிகர் தேவன் த.வெ.க.வில் இணைந்துள்ளார். யார் எந்த கருத்துகளை தெரிவித்தாலும், நடிகர் தேவன் தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-devan-quits-bjp-and-joins-tvk




