தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதியின் மகன் கவின். என்ஜினீயரான இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவருடைய பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்-கிருஷ்ணகுமாரி, உறவினர் ஜெயபால் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன் - கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறுமுகமங்கலத்தில் கவின் பெற்றோர் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஏரல் தாசில்தார் ஸ்ரீனிவாசன் நேற்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவினின் பெற்றோரை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாடு சட் டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொலைபேசியில் பேசுவதாக கூறி செல்போனை கொடுத்துள்ளார். அவர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். நீங்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்" என உறுதியளித்தார். ஆனால் அரசு மேல் முறையீடு செய்வதாக எங்களுக்கு எழுத்துப் பூர்வமாக உறுதியளித்திட வேண்டும் என்றும், அதுவரை தாங்கள் போராட்டத்தை தொடர போவதாகவும் கவினின் பெற்றோர் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmal-kumar-spoke-to-kavins-parents-over-the-phone-assured-that-an-appeal-would-be-filed




