சென்னை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்ஸ்ட் லுக் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில், இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், யோகி பாபு மற்றும் ராஷி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கன்னட நடிகை ருக்மிணி வசந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, யோகி பாபுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் அவர் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. விரைவில் அறிவிப்பு எனினும், ருக்மிணி வசந்த் இணைந்தது குறித்து படக்குழு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dragon-beauty-joins-rajinikanths-dharman-scenes-with-star-comedian




