அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் போரையும் விடுவதாக இல்லை. வரியையும் விடுவதாக இல்லை போலும். 'அமெரிக்க பொருள்களுக்கு தங்கள் நாடுகளில் அதிக வரியை வசூலிக்கிறார்கள்' என்று ட்ரம்ப் அரசு, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பெரும்பாலான உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தது. கால அவகாசங்கள். பேச்சுவார்த்தைகள். ஒப்பந்தங்களுக்குப் பிறகு, சில நாடுகளுக்கு வரி குறைக்கப்பட்டது. சில நாடுகளுக்கு வரி ஏற்றப்பட்டது. அவை அனைத்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றம்"அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; இல்லையென்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது" - ஈரானின் 3 எச்சரிக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் செக் உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரிகள் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த வரி பிரச்னை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் படிகளை ஏற, நீதிமன்றமோ, "மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார். அதனால், ட்ரம்ப் விதித்த வரி செல்லாது" என்று தீர்ப்பளித்துவிட்டது. வரி அஸ்திரங்கள். உலக நாடுகள் மீது தான் விதித்த வரி நீடிக்க வேண்டும் என்று நினைத்த அதிருப்தி ட்ரம்ப் கையில் எடுத்த சட்டம் - 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின், பிரிவு 122. இந்தச் சட்டத்தின் கீழ், உலக நாடுகள் மீது தற்காலிகமாக 10 சதவிகித வரி விதித்துக் கொள்ளலாம். இந்த அஸ்திரத்தை தான் ட்ரம்ப் பிப்ரவரி மாதம் கையிலெடுத்தார். இன்றோடு (ஜூலை 24) 150 நாள்கள் முடிவடைகின்றன. பிப்ரவரி மாதத்தில் ட்ரம்ப், அமெரிக்க அதிகாரிகளுக்கு கொடுத்த முக்கிய வேலைகளில் ஒன்று - எப்படி சட்ட ரீதியாக உலக நாடுகளின் மீது வரி விதிக்கலாம் என்று கண்டுபிடிப்பதாகும். ஏற்றுமதி - இறக்குமதி 'இன்னும் 10 நாள்களே' - ITR Filing-ஐ நீங்களே செய்யலாம்? உங்களுக்கான Step by Step Photo Guide இந்தத் தேடலுக்கான விடை - 1974-ம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301. இது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடும் வெளிநாடுகள் மீது ஏவப்படும் அமெரிக்க வரி சட்டம் ஆகும். இப்போது இந்தச் சட்டத்தின் கீழ், உலக நாடுகளின் மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு - பிற நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களைக் கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி செய்தது ஆகும். எவ்வளவு வரி? இந்தச் சட்டத்தின் படி, இன்று முதல் இந்தியா, சீனா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட 60 நாடுகளுக்கு 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளது. சீனா, இஸ்ரேல், ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் 12.5 சதவிகித வரியை சந்திக்கும். இந்தியா, இலங்கை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் 10 சதவிகித வரியை சந்திக்கும். இதில் 12.5 சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் கட்டாய உழைப்பைத் தடுப்பதற்கான எந்தச் சட்டமும் இல்லை. டொனால்டு ட்ரம்ப்'அமெரிக்காவிடம் பாகுபாடு' - சிறப்பு அதிகாரத்தின் கீழ், கனடா மீது 50% வரி விதித்த ட்ரம்ப்! ஆனால், 10 சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு இறக்குமதித் தடைகளை விதித்துள்ளன. இந்த நாடுகள் இத்தகைய தடைகளைத் திறம்பட அமல்படுத்துவதை மேலும் ஊக்குவிக்க 10 சதவிகித வரி என்று வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியாவிற்கு நல்லதா. கெட்டதா? பிப்ரவரி மாதம் தற்காலிகமாக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த வரி 12.5 சதவிகிதம். ஆனால், இப்போது 10 சதவிகிதம் தான். இப்படி ஒப்பிட்டு பார்க்கையில், முன்பு இருந்ததை விட, இப்போது இந்தியா மீதான வரி குறைந்திருக்கிறது. ஆனால், இந்தியா அமெரிக்காவிற்கு டாப் ஏற்றுமதி செய்யும் பொருள்களில் ஒன்று - ஜவுளி. இந்த வரி இந்திய ஜவுளி இறக்குமதியில் எதிரொலிக்கும். இதனால், இந்திய ஜவுளித்துறை பெரிதும் பாதிக்கும். இந்திய ஜவுளித்துறை மட்டுமல்ல. பல துறைகள் பாதிக்கப்படும். இது அந்த வரி விதிப்பின் பின்னடைவு. இந்த வரியால் இன்னும் என்னென்ன பின்னடைவுகள் என்பது அடுத்தடுத்து தெரிய வரும். பொறுத்திருந்து பார்க்கலாம். பங்குச்சந்தையில் அனைத்து முதலீட்டாளர்களும் இப்போது கவனிக்க வேண்டிய துறை இது! - நிபுணர் அட்வைஸ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/us-imposes-new-tariffs-on-india-china-under-section-301




