சென்னை, தாம்பரத்தில் என்.சி.சி. விமானப் படை பிரிவு மாணவர்கள் முகாம் நாளை தொடக்கம். இது தொடர்பாக, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- 646 மாணவர்கள் பங்கேற்கின்றனர் தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் இயக்குநரகம், சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 'அகில இந்திய வாயு சைனிக் முகாமை' நடத்தவுள்ளது. நாளை முதல் அக்டோபர் 13 வரை முகாம் நடைபெறவுள்ளது. என்.சி.சி. விமானப் படைப் பிரிவின் மிக முக்கியமான இந்த முகாமில், 17 இயக்குநரகங்களை சேர்ந்த மொத்தம் 646 மாணவர்கள் பங்கேற்கின்றனர். லட்சியங்கள் பெண்களுக்கு அதிகாரமளித்தலில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஒரு என்.சி.சி. இயக்குநரகத்திற்கு தலா 16 மூத்த பிரிவு மாணவிகள் என்ற அளவில் அவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இளம் பெண்களுக்கு அவர்களின் விமான போக்குவரத்து சார்ந்த லட்சியங்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கடுமையான போட்டிகள் தாம்பரம் முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் இயக்குநரக அளவிலான கடுமையான போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விமான இயக்கம், சுகாதாரம், தூய்மை, விமான மாதிரி உருவாக்கம்,.22 ரக துப்பாக்கி சுடுதல், ஸ்கீட் ஷூட்டிங், அணிவகுப்பு, கூடாரம் அமைத்தல், ஓட்டம் ஆகிய போட்டிகள் மூலம் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அனுபவ பகிர்வுகள் இம்முகாமில் இடம்பெறும் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மேம்பாடு குறித்த பிரபல பேச்சாளர்களின் அமர்வுகள், நிபுணர்களின் ட்ரோன் தொழில்நுட்ப செயல்விளக்கம், இந்திய விமானப்படையின் முன்னாள் வீரர்களின் அனுபவ பகிர்வுகள் ஆகியவை மாணவர்களை பாதுகாப்புப்படைகள், குறிப்பாக இந்திய விமானப்படையை நோக்கி ஈர்க்கும் வகையில் அமையும். முதல் முறை வழக்கமாக 12 நாட்கள் நடைபெறும் இந்த முகாம், இம்முறை முதன்முறையாக 14 நாட்கள் நடைபெறவுள்ளது. மேலும், பல தலைமுறை இந்திய விமானப்படை பயிற்றுவிப்பாளர்களை உருவாக்கிய இடமான தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இந்த முகாம் நடைபெறுவதும் இதுவே முதல் முறையாகும். என்.சி.சி இயக்குநரகத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி & அந்தமான் நிக்கோபார்) துணை தலைமை இயக்குநர் கமடோர் நம்பியத் சுதீப், 01 அக்டோபர் 2026 அன்று இந்த செயல்முறை முகாமை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வை, என்.சி.சி குழு தலைமையகம் சென்னை 'பி'-யின் குழுத் தளபதி குரூப் கேப்டன் கே.எம். ரகுராமன் மற்றும் அவரது குழுவினர் வழிநடத்துகின்றனர். மேலும், தாம்பரம் விமானப்படை நிலையத்தின் தலைவர் ஏர் கமடோர் தபன் சர்மா, இம்முகாமிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குகிறார். இந்தியாவின் தலைசிறந்த விமானப்படை பிரிவு மாணவர்களை போட்டியிடவும், கற்கவும், வளரவும் உதவும்இம்முகாமில் ஒழுக்கம், தலைமைத்துவம், குழுப்பணி, தொழில்நுட்பத்திறன், உடற்தகுதி மற்றும் விளையாட்டு மனப்பான்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ncc-air-force-cadet-camp-begins-in-tambaram-tomorrow




