வாய்மேடு, குளத்தில் மூழ்கடித்து தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்ததாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மமான முறையில் நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள பண்ணத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்தி(வயது 39). இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த கார்த்தி நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். நண்பர்கள் இடையே தகராறு போலீசாரின் விசாரணையில் நண்பர்களுக்கு இடையே நடந்த தகராறில் கார்த்தி குளத்தில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:- விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கார்த்தி நேற்று முன்தினம் தனது நண்பர் கொக்காலடி பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் விக்னேஷ்வரன்(31) என்பவருடன் மது அருந்தி உள்ளார். இருவரும் மது குடித்துவிட்டு அருகில் உள்ள குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. குளத்தில் மூழ்கடித்து கொலை இந்த தகராறு முற்றியதில் கார்த்தியை, விக்னேஷ்வரன் குளத்தில் மூழ்கடித்துள்ளார். இதில் கார்த்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை விக்னேஷ்வரன் தூக்கிச்சென்று அருகில் உள்ள வாய்க்காலில் போட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். இவ்வாறு போலீசார் கூறினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் தலைஞாயிறு பகுதியில் தலைமறைவாக இருந்த விக்னேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/private-company-employee-murdered-by-drowning-in-pond-friend-arrested




