சென்னை, சேலம் மாவட்டம் ஒதியத்தூரில், அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பேரறிஞர் அம்பேத்கர் சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வரைவு செய்து, அறிஞர்களும், தேச விடுதலை போராட்ட வீரர்களும் நிரம்பிய அவையில் முன் மொழிந்து, விரிவாக விவாதித்து, ஒரு மனதாக நிறைவேற்றிட பெரும் பங்களிப்பு செய்தவர் அம்பேத்கர். கம்பீரமாக காட்சியளிக்கும் வடிவில் அவரது சிலை ஒதியத்தூரில் அமைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை அகற்றம் சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலர் அம்பேத்கர் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பதற்றத்தை உருவாக்கி உள்ளனர். சட்டம் - ஒழுங்கை பராமரித்து, சாதி ஆதிக்க சக்திகளை ஒடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அந்த சமூக விரோத கும்பலுக்கு பணிந்து அம்பேத்கர் சிலையை அகற்றி விட்டது. அவமானம் இந்தியாவின் மிக சிறந்த சமூக அறிஞரும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் சலிப்பறியாத போராட்டம் நடத்திய வருமான அம்பேத்கரை குறிப்பிட்ட சாதி எல்லைக்குள் அடைத்து அடையாளப்படுத்தும் செயல் நாட்டுக்கே அவமானமாகும். இந்த மாபெரும் குற்றச் செயலில் ஈடுபட்ட சிலரை தவிர்த்து, ஒட்டு மொத்த சமூகமும் ஏற்றுக் கொண்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலையை அகற்றப்பட்ட, அதே இடத்தில் அரசு அமைத்துத் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-communist-party-of-india-has-urged-that-the-ambedkar-statue-be-re-installed-in-salem




