சென்னை, தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க வருகிற 8-ந்தேதி தமிழக எம்பிக்களின் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய உத்தேசித்துள்ள நிலையில், எம்பிக்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- மத்திய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் புதுடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-issue-cm-vijay-invites-mps-meeting




