தொழில்நுட்பத் துறையில் உலகின் மிகப்பெரிய கண்காட்சியாகக் கருதப்படும் Consumer Electronics Show 2027 கண்காட்சியில் பங்கெடுத்துக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது சோனி. இது சோனி ரசிகர்களிடையேயும் டெக் ஆர்வலர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நுகர்வோர் மின்னணுவியல் கண்காட்சி உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் சங்கமமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் கண்காட்சி தான் நுகர்வோர் மின்னணுவியல் கண்காட்சி (Consumer Electronics Show). இந்த கண்காட்சியில் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துவது வழக்கம். அந்தக் கண்காட்சியில் தங்களின் புதிய தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவது ஒவ்வொரு நிறுவனத்தின் மிகப்பெரிய மரியாதையாகக் கருதப்படுவது வழக்கம். அதனாலேயே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்காட்சியை எந்தவொரு நிறுவனமும் தவறவிடாது. ஆனால், Consumer Electronics Show 2027-ல் கலந்துகொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பை சோனி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சோனியின் முடிவுக்குக் காரணம் என்ன? 2026 Consumer Electronics Show-வில் சோனி நிறுவனம், ஹூண்டாயோடு இணைந்து தயாரித்து வந்த Afeela எனும் எலெக்ட்ரிக் வாகனத்தின் புரோட்டோ டைப் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த ஒரு தயாரிப்பைத் தவிர எந்தவொரு புதிய அறிவிப்பையோ அல்லது தனி அரங்கத்தையோ 2026 CES கண்காட்சியில் சோனி கொண்டிருக்கவில்லை. கண்காட்சி முடிந்து சில மாதங்களில் ஹூண்டாயுடன் இணைந்து தயாரிக்கும் அந்தத் திட்டத்தையே கைவிடுவதாக அறிவித்திருந்தது சோனி. இந்தநிலையில், வரும் 2027-ம் ஆண்டு லாஸ்வேகாஸில் நடைபெற இருக்கும் CES 2027 கண்காட்சியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சோனி. இதனால், பிளேஸ்டேஷன் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் CES-ல் இடம்பெறப் போவதில்லை என்கிற கவலையில் இருக்கிறார்கள் அதன் ரசிகர்கள். இதற்கு முக்கிய காரணமாக சோனி சொல்வது, `எங்களின் பன்முகத்தன்மை கொண்ட வணிகத்தில் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மற்றும் அது தொடர்பான தகவல் தொடர்புகளை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறியிருக்கிறது. சோனியும் CES-ம் சோனி நிறுவனம், PS5 தயாரிப்பை அறிமுகப்படுத்தியதே CES கண்காட்சியில் தான். கடந்த 2020-ல் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த ஜிம் ரியான், PS5 லோகோவை அறிமுகப்படுத்தியிருந்தார். தயாரிப்பை அறிமுகப்படுத்தாமல், அதை லோகோவை மட்டுமே அறிமுகப்படுத்தியிருந்ததற்கு அப்போதே சோனி நிறுவனம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. 2022 கண்காட்சியில் பிளேஸ்டேஷன் VR2 மற்றும் அதற்கான பிரத்யேக கேமான Horizon: Call of the Mountain-ஐயும் அறிமுகப்படுத்தியிருந்தது. 1967-ம் ஆண்டு முதல் நடந்துவரும் CES கண்காட்சியில் தொடர்ச்சியாக தனது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வந்த சோனி நிறுவனம், முதல்முறையாக 2027 கண்காட்சியில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/technology/sony-to-skip-ces-2027-for-the-first-time-in-60-years-what-is-the-reason




