விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலும் குறிப்பாக இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றும் கேட்கப்பட்டு வரும் ஹிட் பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது. இக்கூட்டணியில் புதிய திரைப்படம் உருவானது. இதுவும் உணர்வுப்பூர்வமாகவே எழுதப்பட்டுள்ளதால், படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிட்ப்பட்டது. ‘நூறு சாமி’ என்ற படத்தின் மூலம் ‘பிச்சைக்காரன்’ பட கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘நூறு சாமி’ படம் கடந்த ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து இருந்தனர். கணவனை இழந்த பெண்ணாகவும் இரண்டு மகன்களின் அம்மாவாகவும் சிறப்பான நடிப்பை சுவாசிகா வழங்கியிருந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கணவனை இழந்த பெண்ணை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. ‘நூறு சாமி’ திரைப்படம் ரூ. 16 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் சாட்டிலைட் (தொலைக்காட்சி) மற்றும் டிஜிட்டல் (ஓடிடி) உரிமைகளை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. We’re delighted to announce that is the Official Satellite Partner and is the Official Digital Streaming Partner for.❤️ A. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-famous-company-has-acquired-the-ott-rights-of-the-nooru-saami-film




