காத்மண்டு, நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு, நிலநடுக்கம் காரணமல்ல. பனிப்பாறை சரிவுதான் ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது:- வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் முதலில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள நில அதிர்வு நிலையங்கள், நீண்ட கால அதிர்வு அலைகள் மற்றும் செயற்கைக் கோள் படங்கள் ஆகியவற்றின் கூடுதல் ஆய்வுக்குப் பிறகு வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமல்ல என்பது தெரியவந்தது. பனிப்பாறை சரிவு மற்றும் குப்பைகள் கலந்த பனிப்பாறை ஓட்டம் ஆகியவையால் ஏற்பட்ட அதிர்வு என்பது உறுதி செய்யப் பட்டது. பனிப்பாறை சரிவு காரணமாகவே இந்த திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதுவே அப்பகுதிக்குக் கீழே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்று தெரிவித்து உள்ளது. அதேபோல கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தின் நிலவடிவவியல் துறை பேராசிரியர் டேனியல் சுகர் கூறும்போது, 5,200 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு செங்குத்துப் பாறையில் இருந்து பனிப் பாறை சரிந்து விழுந்ததே இந்தத் திடீர் வெள்ளத்திற்குக் காரணம். நேற்று மற்றும் இன்றைய செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் கணிசமான அளவு பனியை இழந்திருந்தது. பனி மற்றும் பனிப்பாறை ஆகியவை உருகி அதிக அளவிலான திரவ நீரை பனிப் பாறைக்குள் செலுத்தி இருக்கலாம். அந்த நீர் பனிப்பாறையின் அடிப்பகு திக்குச் சென்று, உராய்வைக் குறைத்து வழுவழுப்பான சூழலை உருவாக்கி சரிந்து இருக்கலாம் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/what-is-the-real-reason-behind-the-massive-floods-in-nepal-information-revealed




