சேந்தமங்கலம், சேந்தமங்கலம் நைனாமலை கோவிலுக்கு ரூ.30 கோடியில் மலைச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று வாகனங்களில் பக்தர்கள் ஆர்வமாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். நைனாமலை கோவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் வரலாற்று புகழ்வாய்ந்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த மலை கோவிலுக்கு பக்தர்கள் வழக்கமாக சுமார் 2 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை கடந்து சென்று பெருமாள் மற்றும் குவலயவல்லி தாயாரை வணங்கிவிட்டு திரும்புவார்கள். மலைமேல் ஏற முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி நிற்கும் பக்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு திரும்புவார்கள். இந்த நிலையில் மலைக்கோவிலில் உள்ள பெருமாளை தரிசிக்க மலைச்சாலை அமைத்து அங்கு பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ரூ.30 கோடியில் தார்சாலை இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறை மூலமாக ரூ.30 கோடி செலவில் அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைச்சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. அதைத் தொடர்ந்து அந்த மலைச்சாலை வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் சமீபத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலனை சந்தித்து முறையிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த மலைச்சாலையை ஆய்வு செய்த பின் பக்தர்கள் பஸ்சில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்தநிலையில் நேற்று பக்தர்கள் ஆர்வமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அந்த மலைக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கினர். வருகிற 11-ந் தேதி முதல் 5 வாரங்களுக்கு அந்த கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/super-facilities-for-nainamalai-devotees-hill-road-work-completed-at-a-cost-of-rs-30-crore




