மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (Madurai District Tiny & Small Scale Industries Association - MADITSSIA) நடத்தும் 11ஆவது தி பிரிண்ட் என் பேக் 2026 ( The Print N Pack 2026) கண்காட்சி மதுரை, விரகனூர் சுற்றுச்சாலைக்கு அருகில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவக்கல்லூரி வளாகத்திலிருக்கும் ஐடா ஸ்கட்டர் வணிக அரங்கத்தில் ஜூலை 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. இக்கண்காட்சியில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறு, குறு, கனரக அச்சு இயந்திரங்கள் பார்வைக்கும், பார்வையாளர்களின் மாதிரி பயன்பாட்டிற்கும் வைக்கப்பட்டிருக்கின்றன. டிசர்ட் பிரிண்டிங், பேப்பர் பிரிண்டிங், பேப்பர் கட்டிங், மஞ்சப்பை, கட்டைப்பை, விசிட்டிங் கார்டு, மரச் சதுரங்கம், சிலை வடிவமைப்பு, அடையாள அட்டை ரோப் பிரிண்டிங், பரிசுப் பொருளில் பிரிண்டிங், பேங்கேஜிங்குத் தேவையான ஆட்டோமேசன் இயந்திரங்கள், அட்டைப்பெட்டி வடிவமைப்பு இயந்திரங்கள் எனப் பிரிண்டிங் & பேக்கேஜிங்குத் தேவையான அ முதல் ஃ வரை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. பார்வையாளர்களையும் வியாபாரிகளையும் வெகுவாகவே கவர்ந்திழுக்கின்றன. அச்சு-பேக்கேஜிங் எக்ஸ்போ தி பிரிண்ட் என் பேக் 2026 தொழில் கண்காட்சியின் தலைவர் பொன்குமார் பகிர்ந்துகொண்டது, "தமிழ்நாட்டில் பிரிண்டிங் & பேக்கேஜிங் துறையின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்? அடுத்த ஐந்தாண்டுகளில் அதன் வளர்ச்சி நிலை என்ன?" பத்து வருடத்திற்கு முன் ஆஃப் செட்டில் பிரிண்டிங் செய்தோம். ஆனால் இன்னைக்கு டிஜிட்டல், லேசர், லேட்டஸ்ட் அப்டேட்னு எங்கையோ போய்விட்டது. அப்போதெல்லாம் 50,000 முதல் 1,00,000 வரைதான் ஆர்டர் எடுத்து ஓட்ட முடியும். ஆனால் இன்றைக்கு டிஜிட்டல் பிரிண்டிங்கில் குறைந்தது 5 முதல் 10 காப்பியே அச்சடிக்க முடிகிறது. உறுதியாகச் சொல்லுகிறேன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி எண்ணிப் பார்க்க முடியாத வண்ணம் இருக்கும். "ஏஐ ஆட்டோமேசன் இந்த அச்சுத்துறையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு? கண்ணிமைக்கும் நொடிக்குள்ள உங்க கையில நீங்க நினைச்சது இருக்குன்னா அதுக்குக் காரணம் இந்த அதிநவீன ஆட்டோமேசன்தான். பத்து நிமிசத்துல நீங்க எதிர்ப்பாக்குற டிசைன் பிரிண்ட் ஆகி உங்க கையில இருக்குறதுதான் டெக்னாலஜியின் வளர்ச்சியா நான் பார்க்கிறேன். "புதிதாக அச்சு மற்றும் பேக்கேஜிங் தொழில் தொடங்கப்போகும் தொழில்முனைவோர்களுக்கு இந்தக் கண்காட்சி மூலம் அமைத்துக்கொடுக்கும் வழிகாட்டிப் பாதை என்ன?" மடீட்சியா கிட்டத்தட்ட 56 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஓர் அமைப்பு. மதுரை மற்றும் மதுரையைச் சுற்றி பல மாவட்டங்களில் இருந்து 1,500 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார். எங்களோடு 7,500க்கும் மேற்பட்டோர் தொடர்பில் இருக்கிறார்கள். இந்தியா மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத்தையும் இயந்திர வகைகளையும் நம் மக்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அறிமுகப்படுத்தி அவர்களின் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதுமே எங்களின் முக்கிய நோக்கம். இலட்சத்தில் வியாபாரம் செய்தவர்களை கோடியில் வியாபாரம் செய்ய இதுபோன்ற முன்னெடுப்புகளால் ஊக்குவித்து வருகிறோம். இதில் முதல்முறை தொழில் தொடங்குவோர்களும் அடங்குவார்கள்'' இக்கண்காட்சியை தொழில்முனைவோர், வியாபாரிகள் மட்டுமின்றி மதுரை, சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து கல்லூரி மாணவர்களும், வருங்கால தொழில்முனைவோர்கள் என 5000 பேர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/business/print-packaging-expo-in-madurai-180-stalls-showcase-global-brand-machinery




