"சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் நடந்த அதிமுக விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "இன்று தவெக ஆட்சிக்கு வந்திருப்பது ஒரு விபத்து, இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, ஒரு கொள்கையும் கிடையாது. இந்த அரசு ஒரு மாததில் ரூ. 28 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்த ஆண்டில ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கினால்தான் அரசை நடத்த முடியும். ஏரியில் வண்டல் மணல் எடுப்பவர்களை மாபியா என்று கூறும் அமைச்சர், மாபியாக்களைத் தப்பிக்க விட்டு விவசாயிகளைக் கொச்சைப்படுத்துகிறார். ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சராகி விட்டார்கள். மூன்று பேர் மட்டும்தான் பேசுகிறார்கள், இன்று தமிழகமே தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தருமபுரி விழாவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் தேவைக்கு மட்டும கடன் வாங்கப்பட்டது. கஜா புயல், கொரோனா ஊரடங்கு எனப் பல்வேறு பிரச்னைகளை அதிமுக ஆட்சி எதிர்கொண்டாலும், இறுதி ஆண்டில் மட்டும் 11 மருத்துவக்கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் கடனை மட்டும்தான் வாங்கியது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்த அரசு மக்களுக்கு என்ன செய்துள்ளது? பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது. ஜன நாயகன் படத்துக்கு அப்படி இப்படி என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால், படம் வந்த ஒரு வாரத்தில் தியேட்டர்கள் காத்து வாங்கியது. அப்படித்தான் இந்த 100 நாள் ஆட்சியும் உள்ளது. ரீல் விடுகிறார்கள் அல்லது ரில்ஸ் போடுகிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்பட்டது. அதன் பின்பு ஜெனரேட்டர் மின்சாரத்தால் மீண்டும் பேசியவர், "அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதுதான் இந்த ஆட்சியோட லட்சணம்" என்றார். ''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/edappadi-palanisamy-criticized-tvk-vijay-and-jana-nayagan-movie




