பெங்களூரு, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி. நகோயா நகரங்களில் நடக்கிறது. இதன் ஆக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரி வாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா, மலேசியா, கஜகஸ்தான், சீன தைபே, வங்காளதேசம். 'பி' பிரிவில் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக பெங்களூருவில் இந்திய அணியின் கேப்டன் சலிமா டெடி கூறு கையில், 'நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்கிறோம். ஆனால் ஒவ்வொரு போட்டியும் ஒரு புதிய சவாலை கொண்டு வரும் என்பதை அறிவோம். நேஷன்ஸ் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டி ஆகியவை ஒரு அணியாக என்ன சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளன. தற்போது அதனை விட ஒருபடி மேலே முன்னேறி செல்வதில் கவனம் செலுத்துகிறோம். எங்களது இலக்கு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்று நேரடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற விரும்புகிறோம். இதற்கு நிலையாக மற் றும் நேர்த்தியாக செயல்படுவதுடன், ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களது சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை அறிவோம். ஒரு அணியாக அந்த சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார். இதேபோல் இந்திய ஆண்கள் ஆக்கி அணியும் நேற்று புறப்பட்டு சென்றது. அத்துடன் பல் வேறு விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் கட்ட குழு டெல்லியில் இருந்து புறப்பட்டது. அவர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் வழியனுப்பு விழா நடத் தப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/hockey/asian-games-gold-medal-goal-is-to-qualify-for-the-olympics-salimas-interview




