சென்னை, மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு "மக்கள் காவலன்" படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில், இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். "மக்கள் காவலன்" படம் "பைசன்" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக "மக்கள் காவலன்" படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கிய "மக்கள் காவலன்" கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையை சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது. முதன்மை கதாபாத்திரத்தில் கே. மணிகண்டன் இந்தப் படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் கே. மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, அருள் மோசஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொடரும் இந்தக் கூட்டணியில் உருவாகும் "மக்கள் காவலன்" திரைப்படத்திற்கும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இந்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 43வது பிறந்த நாள் இந்த நிலையில், இன்று நடிகர் மணிகண்டன் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு "மக்கள் காவலன்" படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில், இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-manikandans-birthday-special-poster-of-the-movie-makkal-kavalan-released




