சென்னை, சென்னை வால் டாக்ஸ் சாலையில் ஒரு வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பைக் மோதலால் தகராறு சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 21). இவர் சென்னை வால் டாக்ஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும், வசந்தகுமாரின் பைக்கும் மோதியுள்ளது. வாலிபருக்கு கத்தி குத்து இதையடுத்து மற்றொரு பைக்கில் வந்த 2 வாலிபர்களுக்கும், வசந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த தகராறின்போது ஆத்திரமடைந்த அந்த 2 வாலிபர்கள் சேர்ந்து வசந்தகுமாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர். குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு இதுகுறித்து தகவலறிந்த பூக்கடை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடந்த இடங்ளைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabbed-to-death-in-chennai-police-launch-net-to-nab-culprits




