'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்' ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நட்சத்திரமாகவே வளர்ந்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். தற்போது அவர் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்குப் 'பி. ஆர். ஷோ' எனப் பெயரிட்டிருக்கிறார். Mamitha Baiju - PRS 1 அவருடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது. ஒருவர் இல்லாமல் மொத்தமாக 6 பேர் இணைந்து 'தி ஆல்ஃபா யூனிட்' என்கிற பெயரில் இப்படத்தை இயக்குகிறார்கள். பிரதீப் ரங்கநாதனின் கதையை இவர்கள் இணைந்து இயக்குகிறார்கள். 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்திற்குப் பிறகு மமிதா பைஜூ, பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் நண்பரும் இயக்குநருமான அஸ்வத் மாரிமுத்து இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'டிராகன்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர், தற்போது ரஜினியின் 'தர்மன்' படத்தை இயக்கி வருகிறார். Ashwath Marimuthu - PRS 1 இவர்களோடு, ஸ்வாசிகா, 'கோர்ட்' படத்தின் மூலம் பரிச்சயமான சிவாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அவர் இசையில் உருவாகியிருக்கும் 'ஆனே வாலே ஸ்டார்' என்கிற தீம் பாடலுடன் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/pradeep-ranganathan-turns-producer-pr-show-the-alpha-unit-mamitha-baiju




