கொள்ளிடம், கொள்ளிடம் அருகே பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரத்யங்கிரா தேவி மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. திருமண தடை, வேலைவாய்ப்பு தடை மற்றும் பல்வேறு காரிய தடைகள் உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்காக பக்தர்கள் இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இக்கோவிலில் ஆவணி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மிளகாய் யாகம் அதன்பின் ஆலயத்திற்கு முன்புறம் உள்ள யாக குண்டத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. மிளகாய் மற்றும் பல்வேறு நறுமணப் பொருட்கள் யாக குண்டத்தில் இடப்பட்டன. யாகத்தின் நிறைவில், யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/mayiladuthurai-kollidam-amavasai-yagam-at-pratyangira-temple



