ஈஸ்டர்ன் கேப் குத்துச்சண்டை போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான ஜொலானி டெட்டே மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தென்ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் ஜொலானி டெட்டே (வயது 37). 2007-2008 ஆண்டில் உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் பிளைவெயிட் பிரிவிலும் 2017 முதல் 2019 வரை உலக குத்துச்சண்டை அமைப்பின் சார்பில் நடந்த போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டம் பெற்றவராக வலம் வந்தவர் ஆவார். இந்நிலையில், தென்ஆப்பிரிக்க விளையாட்டு, கலைகள் மற்றும் கலாசார துறை மந்திரி கெய்டன் மெக்கென்சி கூறும்போது, டெட்டே, தன்னுடைய காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். ஈஸ்டர்ன் கேப் நகரில் டான்ட்சேன் பகுதியில் உள்ள வீட்டின் வாசலுக்கு வந்ததும், கதவு திறப்பதற்காக வெளியே காரில் காத்திருந்து உள்ளார். துப்பாக்கி சூடு அப்போது, திடீரென முகமூடி அணிந்து வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் அவரை காரில் வைத்து, துப்பாக்கிகளால் பலமுறை சுட்டனர். இதில், டெட்டே சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் காரில் இருந்த 27 வயது இளம்பெண்ணும் தாக்குதலில் படுகாயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் என்றார். இந்த தாக்குதலுக்கு அவர் கண்டனமும் தெரிவித்து கொண்டார். டெட்டே, பட்டம் பெறுவதற்கான போட்டி ஒன்றில் கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார். 2017-ம் ஆண்டில் தன்னை எதிர்த்து விளையாடிய போட்டியாளரான சிபோனிசோ கொன்யா என்பவரை மிக விரைவாக, 11 வினாடிகளில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/guinness-world-record-boxer-murdered-by-mysterious-people




