அரசு பள்ளி தலைமை ஆசிரியை புவனா என்பவரை, ஆசிரியை கலைமதி என்பவர் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கரூர், கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஊராட்சி ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புவனா. இதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக கலைமதி என்பவர் பணியாற்றி வருகிறார். கலைமதி சரியாக வேலை செய்யவில்லை என, புவனா அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த கலைமதி, ஜூலை 30ல் வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை புவனாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை, தன் செல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் கூறுகையில், தலைமை ஆசிரியை புவனா மீது, ஆசிரியை கலைமதி தாக்குதல் நடத்தியது குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-attacks-headmistress-in-front-of-students




