மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்வரி(70) என்ற பெண் மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகையை வங்கிகளில் 26 வைப்பு தொகையாக வைத்திருந்தார். அவரது மொபைல் போனுக்கு கிரெடிட் கார்டு பேஸ்புக் லிங்க் ஒன்று வந்தது. கிரெடிட் கார்டு எடுக்கும் ஆசையில் அந்த லிங்க்கை ராஜேஷ்வரி கிளிக் செய்தார். கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ராஜேஸ்வரி பேஸ்புக் இணைப்பை கிளிக் செய்தபோது அவரது மொபைல் போனை சைபர் கிரிமினல் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து மோசடி செய்துள்ளனர். ராஜேஷ்வரி கிரெடிட் கார்டு இணைப்பை கிளிக் செய்தவுடன் வங்கியின் கிரெடிட் கார்டு துறையிலிருந்து பேசுவதாகக் கூறி தன்னை ஜோசப் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அவரை வாட்ஸ்அப் மூலம் அழைத்தார். போனில் பேசிய நபர் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள கோப்பு, வங்கி கிரெடிட் கார்டு சரிபார்ப்பு விண்ணப்பம் என்று தெரிவித்தார். உடனே ராஜேஷ்வரி அந்த இணைப்பை கிளிக் செய்து திறந்து பார்த்தார். இதையடுத்து மொபைல் போனை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த சைபர் கிரிமினல்கள், ராஜேஷ்வரி வங்கிகளில் வைப்பு தொகையாக வைத்திருந்த பணத்தைத் தங்களது பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றத்தொடங்கினர். 26 வைப்புத் தொகையைப் பாதியிலேயே முடித்து அதனைத் தங்களது வங்கிக்கு மாற்றினர். மொத்தம் ரூ.50 லட்சம் மோசடியாக எடுக்கப்பட்டது. இது குறித்து தெரியவந்த உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் ராஜேஷ்வரி புகார் செய்தார். அதோடு அவர் 1930 சைபர் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டு புகார் செய்தார். வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, மோசடி கண்காணிப்புக் குழு மற்றும் டிஜிட்டல் மேலாண்மை அதிகாரிகளையும் அவர் சந்தித்து புகார் செய்தார். ஆனால் வார இறுதி நாளில் சரியான நேரத்தில் செயல்பட முடியாது என்று அவர்கள் கூறியதாக ராஜேஷ்வரி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் பெண் மருத்துவர் கைது - ரூ.7 கோடியை பறித்த ஆன்லைன் மோசடி கும்பல் ரிசர்வ் வங்கி மற்றும் அரசு இணையதளங்களிலும் புகார் செய்தார். அப்படி இருந்தும் ரூ. 16, ரூ. 25 மற்றும் ரூ. 250 மட்டுமே திரும்பப் பெற முடிந்தது. வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு தனது வங்கிக்கணக்கை பிளாக் செய்யும்படி ராஜேஷ்வரி கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்ட பிறகும் அவரது வங்கிக்கணக்கில் ரூ. 12.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு முறையான விசாரணைக் குழுவை அமைப்பதாகச் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவர் உறுதியளித்ததாகவும் ஆனால் தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் ராஜேஸ்வரி கூறினார். ராஜேஷ்வரி பிரதமரின் CPGRAMS மற்றும் முதலமைச்சரின் குறை தீர்க்கும் இணையதளங்களையும் அணுகி அதிலும் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத போதிலும், பிரதமரின் குறைதீர்ப்பு இணையத்தில் தனது புகாருக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது எனக் அவர் கூறினார். சைபர் கிரிமினல்கள் ராஜேஷ்வரியின் வைப்புத் தொகையை எடுத்த நவம்பர் 17ம் தேதி வங்கி மற்றும் மும்பை வடக்கு சைபர் போலீஸில் புகார் செய்தார். ஆனால் சம்பந்தப்பட்ட சைபர் அதிகாரி விடுமுறையில் சென்று இருப்பதாகக் கூறி ஜனவரி 3, 2025 அன்றுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மும்பை: தமிழ் மூதாட்டியிடம் டிஜிட்டல் மோசடி; ரூ.33 லட்சம் பறித்த குஜராத் கிரிக்கெட் வீரர் கைது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/mumbai-woman-lost-rs-50-lakh-after-clicking-a-facebook-link




