ஹூஸ்டன் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கனடாவை வீழ்த்தி மொராக்கோ அணி காலிறுதிக்கு முன்னேறியது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) முடிந்து, 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில், இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டி ஒன்றில் கனடா மற்றும் மொராக்கோ அணிகள் விளையாடின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், 50-வது நிமிடத்தில் மொராக்கோவின் அஜெடின் ஆவ்னாஹி முதல் கோலை போட்டார். கூடுதல் நேரம் 82-வது நிமிடத்தில் அவர் அடித்த 2-வது கோலால் அணி 2-0 என முன்னிலை பெற்றது. 90 நிமிட போட்டி முடிவுக்கு பின்னர், கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதில், சவுபியான் ரகீமி (98) 3-வது கோலை போட்டார். இதனால், போட்டி முடிவில் 3-0 கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது. 4 முறை இரு அணிகளுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. எனினும், யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/football/world-cup-football-morocco-advances-to-quarterfinals-by-beating-canada




