அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அன்பில் அவன்' திரைப்படம். 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர். விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகிய மூவரும் இணைந்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். ‘அன்பில் அவன்’ அத்தோடு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை அசோக் செல்வனும், அவருடைய சகோதரி அபிராமியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த வாரம் 'மீசைய முறுக்கு 2', 'அன்பில் அவன்', 'லெனின் பாண்டியன்', 'தி பாரடைஸ்', 'டோரதி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் 'அன்பில் அவன்' படத்தின் ரிலீஸை அக்டோபர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்துத் தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நாங்கள் எப்போதும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். முன்னதாக 'அன்பில் அவன்' திரைப்படம் 25 செப்டம்பர் 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்து வரும் அபாரமான வரவேற்பும், எங்கள் விநியோகக் கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள அதிக அளவிலான ஆர்வமும் நம்பிக்கையும், இப்படத்தை இன்னும் பெரிய அளவிலும், பரந்த அளவிலும் வெளியிடுவதற்கு எங்களை ஊக்குவித்துள்ளது. Anbil Avan Team Notice அனைத்துப் பகுதிகளிலும் இப்படம் பார்வையாளர்களைச் சிறந்த முறையில் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். 'அன்பில் அவன்' திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தத் திரைப்படம் மிகுந்த அன்புடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதற்குரிய பிரமாண்டத்துடனும், பெரிய அளவிலான வெளியீட்டுடனும் உங்களை வந்தடைய இந்த ஒரு வாரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் அவசியமானதே. இந்தப் பயணத்திற்காக நாங்கள் தயாராகி வரும் நிலையில், உங்கள் தொடர்ந்த அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் உங்களைச் சந்திப்போம் என உறுதியளிக்கிறோம். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக எங்களுடன் இருப்பதற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/anbil-avan-movie-release-postponed-new-release-date-official-statement




