கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பிருந்தே, வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மீது மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். எஸ்ஐஆர் என்ற பெயரில் தகுதியுள்ள லட்சக்கனக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் குர்றம்சாட்டி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு புறம்பாக தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியானதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், இதுகுறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி பேசியதாவது: வாக்காளர் பட்டியலிலிருந்து 27 லட்சம் பெயர்களை நீக்கியதற்கான பொறுப்பு மம்தா பானர்ஜியையே சாரும். பாஜகவையோ அல்லது தேர்தல் ஆணையத்தையோ அல்ல. கேரளத்தில் எஸ்ஐஆர் நன்றாக இருந்தால், மேற்கு வங்காளத்தில் ஏன் மோசமாக இருக்கிறது? நாங்கள் 208 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அதே நேரத்தில் இரு தரப்பினரும் (திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்) 80 இடங்களையே பெற்றுள்ளனர். மம்தா பானர்ஜியால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/27-lakh-voters-disqualified-in-west-bengal-mamata-is-responsible




