கவுகாத்தி, கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 406 ரன் இலக்கை இந்திய அணி 43.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது. 400 ரன்களுக்கு மேலான ஸ்கோரை இந்திய அணி வெற்றிகரமாக 'சேசிங்' செய்தது இதுவே முதல் முறையாகும். கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமும் (233 ரன், 26 பவுண்டரி 8 சிக்சர்) ரோகித் சர்மா சதமும் (101 ரன்) விளாசினர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் 3 வீரர்கள் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. இந்த நிலையில், பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சமீபகாலங்களில் பந்துவீச்சின் தரம் சரிந்துள்ளது. இதைப்போல தட்டையான ஆடுகளங்களை கொடுத்தால் யாரும் பந்துவீச வரப்போவதில்லை. ஏன் அடுத்து கிரிக்கெட் விளையாடவரும் ஒரு குழந்தையிடம் பேட் அல்லது பந்தை கொடுத்தால், அது நிச்சயம் பேட்டை தான் தேர்ந்தெடுக்கும்.தொடர்ச்சியாக பேட்டிங்கை தான் ஹீரோ போல காட்டிவருகிறார்கள். பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சுலபமாக என்ன பவுலிங் போடுறாங்கனு விமர்சனம் பண்ணிட்டு போய்விடுகிறார்கள். ஆனால் தற்போது உருவாக்கப்படும் பேட்களின் பிளேடு பகுதியானது பந்து பட்டாலே தெறித்து ஓடுவது போல பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது; அதனால் நல்ல பந்தை வீசினால் கூட விக்கெட்டை வீழ்த்த முடிவதில்லை. என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/even-when-bowling-a-good-delivery-i-am-unable-to-take-a-wicket-ashwin




