கோவை, விமான நிலைய விரிவாக்கம் கோவையின் வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்கம் மிகவும் அவசியம். இங்குள்ள 9 ஆயிரம் அடி நீள ஓடுபாதையை 12 ஆயிரம் அடியாக நீட்டிக்க வேண்டும். இதற்காக கடந்த காலத்தில் ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்ப டுத்தப்பட்டது. ஆனால் கூடுதலாக 7 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. எனவே நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். கோவை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டால் போயிங் 777, ஏர்பஸ் ஏ350 போன்ற பெரிய சர்வதேச விமானங்களை கோவையில் இருந்து நேரடியாக இயக்க முடியும். மேலும் சரக்கு விமானங்களையும் பிற நாடுகளுக்கு இயக்க முடியும். இதனால் தொழில் வளர்ச்சி மேம்படும். சுற்றுச்சுவர் கட்டும்பணி இந்த நிலையில் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது பயன்பாட்டிற்கு 10.5 மீட்டர் அகலமுள்ள சாலை அமைக்கும் அளவிற்கு இடம் விட்டு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று கூறினர். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் 4 மீட்டர் மட்டும் சாலைக்கு விடப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் 10.5 மீட்டர் அகல சாலைக்கு இடம் விடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுச்சுவர் கட்டும் பணி பாதிக்கப்பட்டது. நில அளவை பணி இதைத்தொடர்ந்து கலெக்டர் பவன்குமார் அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்டார். அப்போது 10.5 மீட்டர் அகல சாலை இருந்தால் மட்டுமே தங்களது பகுதியில் கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். வாகனங்கள் எளிதாக சென்று வர முடியும் என்றனர். அதை ஏற்று அந்த பகுதியில் 10.5 மீட்டர் அகல சாலை அமைக்க நில அளவை பணி மாவட்ட நிர்வாகத்தால் கடந்த 3 நாட்களாக நடைபெற்று நிறைவடைந்தது. இது தொடர்பாக விமான நிலைய ஆணையத்திடம் அறிக்கை மற்றும் வரைபடம் வழங்கப்பட்டு உள்ளது. ஆணையத்தின் ஒப்புதல் பெற்றதும் விமான நிலைய சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-airport-expansion-land-survey-work-for-road-construction-completed




