சென்னை, முடிந்துபோன வழக்கை எடுத்துப் பேசுவது முட்டாள்தனம் என்று முதல்-அமைச்சர் விஜய்யை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். சட்டசபையில் பரபரப்பு தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்துப் பேசினார். அப்போது, கட்சி நிதி பெற்ற விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார். திமுக உறுப்பினர்கள் அமளி இதற்கிடையில், முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர், மறுப்பு தெரிவித்த்நிலையில், தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, தி.மு.க. உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். உடனடியாக அவைக் காவலர்கள் வந்து சில தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. துரைமுருகன் கருத்து இந்த நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய்யின் நேற்றைய சட்டசபை பேச்சு குறித்து அவர் விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில், “கம்யூனிஸ்ட் கட்சிகளே முதல்-அமைச்சரின் பேச்சை வெளுத்து வாங்கிவிட்டன. சர்க்காரியா ஆணைய வழக்கில் நீதிமன்றமே எங்களை நிரபராதிகள் என கூறிவிட்டது. முடிந்துபோன வழக்கை எடுத்துப் பேசுவது முட்டாள்தனம். முதல்-அமைச்சரின் பேச்சு அநாகரிகமானது” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-foolish-to-talk-about-a-closed-case-duraimurugan




