துபாய், 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 20 ஓவர்) துபாயில் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன. இதைத்தொடர்ந்து நடந்த முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை பதம் பார்த்து தொடர்ந்து 10-வது முறையாகவும், இரண்டாவது அரைஇறு தியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது தடவையா கவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியனான இலங் கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/asia-cup-final-india-wins-toss-elects-to-bat




