நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, மண்ணாலும் குப்பைகளாலும் மூடப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணிகளுக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தின் பல பகுதிகளை திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு புரட்டிப்போட்டது. பனிப்பாறை சரிவு காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திரிசூலி பகுதியில் அமைந்துள்ள Trishuli-3A Hydropower Project-ம் இந்தப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளத்துடன் அடித்துவந்த சேறும் குப்பைகளும் சுரங்கத்தின் நுழைவுப் பகுதிகளை மூடியதால், உள்ளே வேலை செய்த பலரின் நிலை என்னவென்று தெரியாமல் போனது. இந்த நிலையில், ஒன்பது நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் இருந்து கபீர் மகர்ஜன் (45),சஞ்சய் ஷா (30) ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் சுரங்கத்தின் உள்ளே சுமார் 170 மீட்டர் தொலைவில் இருந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் நடத்திக்கொண்டிருந்தபோது சுரங்கத்துக்குள் இருந்து சத்தங்கள் கேட்டதாகவும், அதன் பிறகு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சய் ஷா,Nepal Electricity Authority-யில் Mechanical Foreman-ஆக பணியாற்றி வந்தவர்.கபீர் மகர்ஜன்,Trishuli-3A திட்டத்தில் Supervisor-ஆக இருந்துள்ளார். நீண்ட நேரம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்ததால் இருவருக்கும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த இரண்டு பேரின் மீட்பு, இன்னும் சுரங்கங்களுக்குள் சிக்கியிருப்பவர்களையும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலி பகுதியில் உள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் சுமார் 500 பேர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் சுரங்கங்களுக்குள் தொடர்ந்து காற்றை செலுத்தி வருகின்றனர். இந்த வெள்ளப் பேரிடரில் நேபாளத்தில் இதுவரை 1,259 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக நேபாள தகவல் தொடர்புத்துறை அமைச்சர் Bikram Timilsina தெரிவித்துள்ளார். “மேலும் பலர் மீட்கப்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று அவர் தனது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பேரழிவுக்கு நடுவே, ஒன்பது நாட்களுக்குப் பிறகு இரண்டு உயிர்கள் மீட்கப்பட்டிருப்பது, தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், தங்கள் உறவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கும் புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/environment/disasters/2-persons-rescued-alive-from-hydropower-tunnel-9-days-after-nepal-floods




