பெரம்பலூர், ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் தங்க நகை, பல லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள குரும்பலூர் பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி தேவ சகாயசுத்தரி என்கிற ராஜலட்சுமி(வயது60). திருச்சி மாவட்டம் புதூர்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். வயது மூப்பினால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியராஜ் உயிரிழந்து விட்ட நிலையில், ராஜலட்சுமி தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் மகள் வழி பேத்தி உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டதை அறிந்து கடந்த 10ம் தேதி ராஜலக்ஷ்மி சென்னைக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் குரும்பலூர்பாளையம் கிராமத்தில் உள்ள ராஜலட்சுமியின் வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டு, பீரோ திறந்து இடப்பதை கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து ராஜ லட்சுமிக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சென்னையில் இருந்து பெரம்பலூர் நோக்கி ராஜலட்சுமி பதறி அடித்துக் கொண்டு வந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மகனின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த தங்க நகைகளும் பல லட்ச ரூபாய் ரொக்க பணமும் திருடுபோனது தெரியவந்திருக்கிறது. ராஜலட்சுமி பெரம்பலூர் வந்த பின்னர்தான் பறி போன பொருட்களின் உண் மையான மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்து வருகின்றனர். ஊருக்கு நடுவே குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் குரும்பலூர் பாளையம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/perambalur-80-sovereigns-of-gold-jewelry-and-cash-stolen-from-the-home-of-a-retired-headmaster




