தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அதன் ஆட்சி நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளன. "தூய சக்தி அரசியல்", "ஊழலற்ற நிர்வாகம்" என்ற முழக்கங்களுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதலமைச்சர் விஜய்-யின் கூற்றுகளுக்கு முற்றிலும் மாறாக தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று அரசியல் எதிர்த்தரப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அமைச்சர் கில்லி சரத் இது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஒருபுறம் White Powder புகழ் அமைச்சர், மறுபுறம் பொய்சொல்வதையே தன் தொழிலாக கொண்டு நிழல் முதலமைச்சராகச் செயல்படுவதாகச் சொல்லபடும் மற்றொரு அமைச்சர், இதற்கிடையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்காக சொந்தக் கட்சியிலேயே லஞ்சம் வசூலிக்கப்படுவதாகப் புகாருக்குள்ளாகியிருக்கும் மூத்த அமைச்சர் – ஊழலை ஒழிப்போம் எனக் கொக்கரித்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன தூய சக்தி அரசியல் இதுதானா? தொட மாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தையே சூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றிவிட்டார்களோ என்று எண்ணும் அளவிற்கு, சினிமா வசனங்களை ஒரே டேக்கில் அள்ளிவிட்ட முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான White Powder புகழ் அமைச்சர் மீது இதுவரை விசாரணை கூட நடத்த முன்வராரது ஏன்? முதல்வர் விஜய் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையின் மூலமாக பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாகக் கூறி முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரையும், அவர்கள் ஆற்றும் மக்கள் பாதுகாப்புப் பணிகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் பேசி, அவ்வழக்கின் விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில் செயல்படும் பொய்த்துறைக்கென்றே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராகச் சொல்லப்படும் அமைச்சரின் அரைவேக்காட்டுத்தனத்தை உண்மையான முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம்தான் என்ன? வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்துபுகார்கள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வருவது, தூயசக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. டிடிவி தினகரன் - தவெக விஜய் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றவகையில் பொதுவெளியில் கர்ஜித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களையும், லஞ்சப் பணம் கொடுப்பவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதன் மூலம், ஏற்கனவே தங்களால் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தவெக அரசும், அதன் முதலமைச்சரும் பாதுகாக்க முனைகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல தவெக ஆட்சியில் புகாருக்கு உள்ளாகியிருக்கும் இந்த வழக்கறிஞர் நியமன ஊழலே அடுத்த ஐந்தாண்டு கால தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஆகவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளைக் கலைந்து, வெளிப்படையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு தகுதியுடைய வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்திட வேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த நியமனத்தில் புகாருக்கு உள்ளானவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு ஊழல் முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். "ஸ்டாலினைப் பார்த்து அரசியலுக்கு வந்து சில மாதங்களேயானவர்கள் விமர்சிப்பது அற்பமானது"- டிடிவி தினகரன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/ttv-dhinakaran-has-questioned-tvk-governments-stance-on-corruption




