வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.27.51 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கென் எழுதிய ‘வெட்டிங் சாங்’ பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் நாள் வசூல் இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.27.51 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மட்டும் ரூ.6.75 கோடி வசூல் என கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/do-you-know-how-much-the-first-day-collection-of-suriyas-vishwanath-and-sons-film




