தென்காசி, நீர்வரத்து அதிகரிப்பு வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதிகளில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை வெளுத்து வாங்கியது. தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் எதிரொலியாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் அங்கு மாலை 6 மணி முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. குளிக்க அனுமதி அதேபோன்று மெயின் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் இரவு 8 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், நீர்வரத்து சீரானதை தொடர்ந்து இன்று காலை முதல் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் விழுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் குளித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-to-bathe-in-the-courtallam-waterfalls




