சவுத்தாம்டன், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற 3 டி20 ஆட்டங்களிலும் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. சவுத்தம்டன் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் பில் சால்ட் 6 ரன்களில் வெளியேறினார்.பின்னர் ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இந்திய அணியின் பந்துவீச்சை இருவரும் சிதறடித்தனர். அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் (12 சிக்சர், 8 பவுண்டரி) சதமடித்து 131 ரன்களில் வெளியேறினார். ஹாரி புரூக் (8 சிக்சர், 4 பவுண்டரி) 95 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/பட்லர்-சதம்புரூக்-அசத்தல்-இங்கிலாந்து-அணி-257-ரன்கள்-குவிப்பு




