சென்னை, பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. பத்மஸ்ரீ விருது மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இரங்கல் இந்நிலையில் சாலமன் பாப்பையா மரணத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு நன்கறிந்த பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (வயது 90) அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 11, 2026) காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தையும், வருத்தத்தையும் தருகிறது. சாலமன் பாப்பையா, பிப்ரவரி 22, 1936 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தான்குடியில் பிறந்தார். இனிய குரல் வளம் சாலமன் பாப்பையா அவர்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது நகைச்சுவை ததும்பும் எளிய சொற்பொழிவால், வாதத் திறமையால், இனிய குரல் வளத்தால் தலைமுறைகளைத் தாண்டி அனைத்து பிரிவு மக்களையும் கவர்ந்தவர். திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார். முற்போக்கு சிந்தனையாளர் முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’, ‘பத்ம ஸ்ரீ’ உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நினைவில் வாழும் மூத்த தலைவர்களான இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோருடன் மிகுந்த நட்பு பாராட்டியவர். தா.பாண்டியன், சாலமன் பாப்பையா அவர்களுடன் பல பட்டிமன்றங்களிலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார். சாலமன் பாப்பையா அவர்கள் சிறந்த முற்போக்கு சிந்தனையாளர் ஆவார். அவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல்களின் இலக்கியச் செழுமையை அவர் தனது நூல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-condoles-the-death-of-solomon-pappaiah




