யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துவருகிறார். கடந்த 2009ம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கலகலப்பு (2012), மான் கராத்தே (2014) போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் புகழ் பெற்றார். அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், ஜெயிலர், கடைசி விவசாயி, மெர்சல், மாஸ்டர் மற்றும் மாவீரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். Yogi Babu's milestone 300th film,, is all set to hit screens on July 17@iYogiBabu — Dhev Cinemas (@DhevCinemasPvt) June 25, 2026 யோகி பாபுவின் 300-வது திரைப்படம் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் டீசர் கடந்த மார்ச் 18 ம் தேதி வெளியானது. இது யோகி பாபு நடிக்கும் 300 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் ‘சாமி தந்த வரமே’ பாடல் சமீபத்தில் வெளியானது. படத்தின் ரிலீஸ் அறிவிப்பு இந்நிலையில், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் வரும் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இசை வெளியீட்டு விழா அறிவிப்பு இந்த நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாகவும், இதற்கான மேடை தயாராக உள்ளதாகவும் படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளார். இப்படம் வரும் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. The stage is set for a grand musical celebration! ✨ The Grand Audio Launch of is happening Tomorrow! ❤️ A Praise God!@iYogiBabu … — D.IMMAN (@immancomposer) July 7, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/yogi-babus-arjunan-perpaththu-film-audio-launch-event-update




