மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்கும் அரசின் முடிவு குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடும் பணியை தனியாருக்குத் தாரைவார்ப்பதா? - தூய்மைப் பணிகள் தொடங்கி விமான நிலையம் வரை தனியாருக்குத் தாரை வார்ப்பதில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? டிடிவி தினகரன் வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட போதே, மின்வாரியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்க முயன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் குளறுபடி என அடுத்தடுத்து எழும் புகார்களைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மின் கணக்கீட்டாளர் பணியை தனியாருக்குத் தாரைவார்ப்பதன் மூலம் தன் கையாலாகத் தனத்தைத் தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டிருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. முதல்வர் விஜய் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக, தூய்மைப் பணிகள் தொடங்கி போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள் மற்றும், நடத்துனர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம், சென்னை விமான நிலையம் வரை தனியாரையே நாடிக் கொண்டிருப்பது மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனியாருக்குத் தாரைவார்க்க தவெக இலக்கு நிர்ணயித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, மின் கணக்கீட்டு பணியை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை உடனடியாகக் கைவிடுவதோடு, மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். ''எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?" - முதல்வர் விஜய்யை சாடிய ஸ்டாலின் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/why-is-cm-vijay-is-so-keen-on-handing-everything-over-to-private-sector




