சென்னை, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நகரி அருகே உள்ள நின்றறை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் மனைவி அருணா (வயது 43). இவர் சம்பவத்தன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தாமரைப் பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள வந்தார். வயல்வெளியில் கொலை பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டார். இந்த நிலையில் அவர் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம் அருகே வயல்வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக் கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அருணாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப் பட்டன. அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்தன. திருட்டுக்காக நடந்த கொலை அல்ல இதனால் இது திருட்டுக்காக நடந்த கொலை அல்ல என்பது தெரியவந்தது. மேலும், இது பாலியல் வன்கொடுமையால் நடந்த கொலையும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் அருணாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, அவரது அடையாளங்களை அழிப்பதற்காக முகத்தில் ஆசிட் அல்லது சிதைவை ஏற்படுத்தும் வேதிப்பொருளை ஊற்றி உள்ளனர். கொலைக்கான காரணம் என்ன? அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட அருணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனிப்படைகள் அமைப்பு கொலையாளிகளை பிடிக்கவும், கொலை பற்றி துப்பு துலக்கவும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி வினோத் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாவின் பிணத்திற்கு அருகில் ஒரு செல்போன் கிடந்தது. அதில் பதிவான அழைப்ப விவரங்கள் மற்றும் தகவல்களை கொண்டு அவரது உறவினர்கள் மற்றும் சில முக்கிய சந்தேக நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம்,வெள்ளக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவில் கேமரா காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தடய அறிவியல் துறையினர் ஆய்வு அருணா திருமணம் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் கொலை நடக்கும் வரை யார் யாரை சந்தித்தார் என்பதை இதன் மூலம் கண்டறிய முயல்கின்றனர். அருணாவின் முகத்தில் ஊற்றப்பட்டது ஆசிட் மட்டும்தானா அல்லது அடையாளம் தெரியாமல் இருக்க கல் உப்பு மற்றும் பிற வேதிப்பொருட்களைக் கலந்து ஊற்றினார்களா என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே உடல் வீசப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வரப்பட்டாரா? என்றும் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர். அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே அவரது செல்போன் அழைப்பு பதி வான விவரங்களை வைத்து ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து கொலைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண் கொலையில் வாலிபர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-caught-in-andhra-pradesh-womans-murder-sensational-news




