மதுரை, பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழனி நில மோசடி பழனி மலை அடிவார பகுதியில், பழனி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள 1.40 ஏக்கர் நிலத்தை வெள்ளத்துரை (வயது 60), சேதுபதி (67) ஆகியோருக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த மோசடி விசுவரூபம் எடுத்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்புடைய நிலம் என கூறப்படுவதால், இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீ சார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, இவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் சம்பந்தப்பட்ட நாளில் கொடைக்கானலில் இருந்து பொறுப்பு சார்பதிவாளராக சென்று பத்திரப்பதிவு செய்து கொடுத்த ஜஸ்டின் மணிகண்டனும் (49) கைது செய்யப்பட்டார். விசாரணை இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வக்கீல் அன்வர்தீனுக்கு, திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், அன்வர்தீன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, நீதிபதி ராஜபிரபு விசாரணை நடத்தினார். ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி இதற்கிடையே, இந்த வழக்கில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு ஜஸ்டின் மணிகண்டன், மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், "ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சைகள் மேற்கொண்டு, 'ஸ்டெண்ட்' வைத்துள்ளார். மேலும் அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்படும். அவரது உடல்நிலை எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக மேலும் சில பரி சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால் மீண்டும் அவருக்கு 'ஸ்டெண்ட்' பொருத்தப்படும். தற்போது அவர் இதயவியல் சிகிச்சை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-sub-registrar-justin-manikandan-admitted-to-hospital




