புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய முக்கிய விஷயங்கள் குறித்து முன்னாள் பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “பிரதமர் மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாடிய இன்றைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், பயங்கரவாதத்திற்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக ஆபரேஷன் சிந்தூர் போன்ற இந்தியாவின் பதில் தாக்குதல்களைக் கண்டு உலகமே உற்று நோக்கியதை எடுத்துரைத்தார். தற்போது நடைபெற்றுவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும், அதில் நாட்டு மக்களாகிய நமது பங்கு குறித்தும், டிஜிட்டல் முறையில் சுயமாக நாமே பதிவு செய்யும் வகையில் என்ற இணையதளம் குறித்தும் பிரதமர் உரையாற்றினார். அடுத்ததாக விஸ்வஹிந்து பரிஷத் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் மதிப்பிற்குரிய அசோக் சிங்கல் நூற்றாண்டினை போற்றும் வகையில் தேசத்திற்காக ஆற்றிய பணிகள் பற்றி நினைவு கூர்ந்த பிரதமர், அவரின் ராமஜென்ம பூமி போராட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைத்தார். சோமநாதர் ஆலயம், சூரியனார் கோவில் மீண்டும் கட்டமைக்கப்பட்டதற்கான சுயமரியாதை திருநாளை கொண்டாடியதை நினைவு கூர்ந்ததுடன் கலாச்சார பெருமைகள் மீண்டும் கட்டி எழுப்பப்படுவதை பெருமிதத்தோடு விளக்கினார். மேலும் தமிழ்நாட்டில், திருச்சி மணப்பாறையில் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் அவர்களின் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பின்பற்ற ஆலோசனை தெரிவித்தார். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் மேற்கொள்ளும் சமுதாய பணிகளை பட்டியலிட்ட பிரதமர் தூய்மையான பாரதம் படைப்பது நாம் மகாத்மா காந்திக்கு செலுத்தும் அஞ்சலி என்றும் எடுத்துக் கூறினார். இயற்கையுடனான நமது உறவினை வலுப்படுத்தும் நோக்கில் வனவிலங்குகள், சுற்றுசூழல் பாதுகாப்பு, மேற்குவங்க சுந்தரவன காடுகள் அங்குள்ள மக்கள் வாழ்க்கை முறை குறித்தும் உரையாடிய பிரதமர், அடுத்ததாக போதையில்லா பாரதம் குறித்த விழிப்புணர்வு இயக்கம் இளைஞர்களால் பன்மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதைக் கூறி பெருமிதம் அடைந்தார். உத்தர பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டம் அதிக நெல்லிக்காய் சாகுபடி மூலம் மதிப்பு கூட்டப்பட்டு உயர் பொருளாதார வளர்ச்சி அடைந்திருப்பதை கூறிய பிரதமர் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பதை உறுதியாகக் கூறினார். மேலும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் முருங்கை, சிறுதானியம் போன்ற விலை மலிவான ஊட்டச்சத்து மிக்க உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்ய முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இறுதியாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட விதம் குறித்தும் மற்றும் தாய்லாந்து நாட்டில் விநாயகக் கடவுள் வழிபாடு குறித்தும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் கற்றறிந்தோம்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-has-emphasized-that-creating-a-clean-india-is-the-tribute-paid-to-mahatma-gandhi-vanathi-srinivasan




