சென்னை, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், இந்த படத்தை சீனாவில் வெளியிட வேண்டும் அப்படி வெளியிட்டால் நிச்சயமாக ரூ.1,000 கோடி வசூல் செய்யும் என்று தெரிவித்துள்ளார். கதாநாயகனாக உயர்ந்த சூரி ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. தொடர்ந்து ‘ஜில்லா’, ‘வேதாளம்’, ‘அண்ணாத்த’, ‘ரஜினிமுருகன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. நட்சத்திர பட்டாளத்துடன் ‘மண்டாடி’ தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூரி - சுஹாஸ் நடனமாடிய இசை வெளியீட்டு விழா இந்த நிலையில், ‘மண்டாடி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர்கள் சூரி மற்றும் சுஹாஸ் இணைந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். நிச்சயமாக 1000 கோடி வசூல் செய்யும் இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், "நல்ல நடிகனுக்கு பலம் அவரது ரசிகர்கள் தான். சூரி ரசிகர்கள் சரியான நடிகனுக்கு தான் ரசிகராக இருக்கிறார்கள் ஏனென்றால் சூரி கடினமான உழைப்பாளி. சூரி அவர்கள் ரிஸ்க் எடுப்பதை கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். நான் எப்போதுமே இயக்குனர்களுக்கு அடிமை, அவர்கள் எதை சொன்னாலும் செய்துவிடுவேன். கடலுக்குள் நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இந்த து. இந்த படத்தை கோவில் வண்டும் அப்படி வெளியிட்டால் நிச்சயமாக ரூ.1,000 கோடி வசூல் செய்யும்." என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-movie-mandadi-will-definitely-gross-1000-crore-says-actor-sathyaraj




