தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 கிலோ 435 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் ரோந்துபணி தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானுபன்விளை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி வந்த நபர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 4.4 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்; 3 பேர் கைது அதைத் தொடர்ந்து குரும்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, சுனாமிகாலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாணிக்கம் (வயது 36), அவரது மனைவி சுமதி(33) மற்றும் வானுபன்விளை பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் தனுஷ்கோடி(37) ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ 435 கிராம் கஞ்சா மற்றும் ஒரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/44-kg-of-ganja-bike-seized-in-thoothukudi-3-arrested




