கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. புதிதாக 19 பேர் மந்திரிகள் பதவி ஏற்றனர். இதனால் மந்திரி பதவி கிடைக்காத மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணப்பா, தினேஷ் குண்டுராவ், எச்.கே.பட்டீல் உள்ளிட்ட சிலரை சமாதானப்படுத்த முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மந்திரிசபையில் சிறிய மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொண்டார். மாலை 5 மணிக்கு அவர் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அவர் பேச உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/karnataka-deputy-chief-minister-dk-shivakumar-makes-a-sudden-trip-to-delhi




