கணவன் மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டால் மனைவியுடன் இருக்கும் குழந்தைகள் 18 வயதை கடக்கும் வரை அவர்களின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமையாகும். கர்நாடகா மாநிலம், மங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் தந்தை தனது முதுகலை மருத்துவப் படிப்புக்கு ரூ.16 லட்சம் கொடுக்கவேண்டும் என்று கோரி, குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 2005-ன் (DV Act) பிரிவு 20-ன் கீழ் பண உதவி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது முதுகலைப் படிப்புக்குத் தேவையான ரூ.16 லட்சத்தை தனது தாத்தாவிடமிருந்து கடனாக வாங்கியதாகவும், அதனை திரும்பக் கொடுக்கவேண்டியிருப்பதால் அப்பணத்தை தனது தந்தை கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அப்பெண் தனது பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு தன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது அப்பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 18 வயதைக் கடந்த மகளுக்கு அவரது படிப்புச் செலவை வழங்கும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பெண்ணின் தந்தை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 2000ம் ஆண்டு பிறந்த தனது மகள், மனுவைத் தாக்கல் செய்தபோதே சட்டப்படி வயது வந்தவராக (சிறுமி அல்லாதவராக) ஆகிவிட்டதால், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் (DV Act) கீழ் பண ரீதியான நிவாரணம் கோர அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார். மகளின் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான செலவு முழுவதையும் தானே ஏற்றதாகவும், மருத்துவத் தொழிலைத் தொடங்குவதற்குப் பதிலாக அவர் தன்னிச்சையாக முதுகலைப் படிப்பைத் தொடர முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தனது மகள் முதுகலைப் படிப்பின் போது மாதம் ரூ. 60,000 உதவித்தொகை பெற்று வந்ததாகவும், எனவே அவரால் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ள முடியும் என்றும் அவர் வாதிட்டார். மகள் 18 வயதைக் கடந்த பிறகு, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை 'பாதிக்கப்பட்ட நபர்' என்று கருத முடியாது என்றும் அந்தத் தந்தை வாதிட்டார். மேலும் கடன் வாங்கி படிப்பை தொடர முடியுமென்றும் வாதிட்டார். ஆனால் தான் மேஜர் ஆனாலும் தனது கல்விக்கு உதவும் தந்தையின் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என்று மகள் வாதிட்டார். இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி சந்தோஷ் தனது தீர்ப்பில், ``அடிப்படை வசதிகள், சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குவது பெற்றோரின் கடமையாகும். குழந்தை வயது வந்தவராக ஆனவுடன் இந்தக் கடமை முடிந்து விடுவதாகக் கூற முடியாது" என்று குறிப்பிட்டார். கர்நாடகா உயர் நீதிமன்றம் மேலும், ``உலகெங்கிலும் உள்ள வழக்கம் மற்றும் நடைமுறையின்படி, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தருவது பெற்றோரின் தார்மீகக் கடமையாகும்" எனக் குறிப்பிட்டு, தந்தையின் நிதி நிலையை கவனத்தில் கொண்ட நீதிபதி சந்தேஷ், அவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய செழிப்பான வணிகத்தில் ஈடுபட்டு வருவதையும், கணிசமான நிதி வலிமையைக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டார். இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பண ரீதியான நிவாரணம் என்பது வெறும் பராமரிப்புச் செலவுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், கல்விச் செலவுகளையும் உள்ளடக்கியது என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ``மகள் வயதுக்கு வந்த பிறகு வங்கிக் கடன் பெற்றுத் தனது கல்வியைத் தொடரலாம் என்ற மனுதாரரின் வாதம், விசாரணை நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதற்கான ஒரு காரணமாக அமையாது" என்று நீதிபதி சந்தேஷ் குறிப்பிட்டார். ஒரு குழந்தை சட்டப்படி வயது வந்தவராக (சிறுவர் பருவத்தைக் கடந்தவராக) ஆனவுடனேயே பெற்றோரின் கடமைகள் தானாகவே முடிந்துவிடுவதில்லை என்றும் நீதிபதி சந்தோஷ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/it-is-a-fathers-duty-to-bear-the-educational-expenses-of-his-unmarried-daughter-over-the-age-of-18-karnataka-high-court




