வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய். Siva சிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர் தொகுதியில் 43,000 பேரை கட்சி உறுப்பினராகச் சேர்த்ததால் விஜய்யே சிவாவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என விஜய் முடிவெடுத்ததற்கும் அந்தத் தொகுதியின் வலுவான கட்டமைப்பிற்கும் முக்கியக் காரணமாக இருந்தது. வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தின் போதுமே சிவாவை மேடைக்கு அழைத்து, "எனக்காக இவர் தொகுதியை விட்டு கொடுத்திருக்காரு. இவரை நான் பார்த்துக்குறேன். கவலைப்படாதீங்க." என விஜய் பேசியிருந்தார். பிரசாரத்தின்போது தவெகவின் பணிமனைக்கு விஜய் சென்றபோது அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், தொகுதியில் மக்களின் புகார்களை வாங்க சிவா எடுக்கும் முயற்சிகள் போன்றவற்றால் முதல்வர் விஜய்யின் குட்புக்கில் அவர் இடம்பிடித்திருந்தார். முதலமைச்சருடன் சிவா இதைத் தொடர்ந்தே சிவாவுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்து வாரியத் தலைவர் பதவி கொடுக்க முதல்வர் விஜய் முன்வந்திருக்கிறார். அதுவும் இருப்பதிலேயே வலுவான அதிகாரமிக்க வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவியை சிவாவுக்குக் கொடுத்திருக்கிறார். முதல்வரைச் சந்தித்து நியமன ஆணையை வாங்கி வந்த சிவாவிடம் பேசினோம், "இப்போதுதான் தளபதியைச் சந்தித்துவிட்டு வருகிறேன். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. 'உன்னை இப்படி ஒரு இடத்துல பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. நீ மேன்மேலும் நிறைய உயரங்களை எட்டணும்'னு தோளில் தட்டி வாழ்த்தி அந்த நியமன ஆணையை தளபதி கொடுத்தார். 16 வருடமாக மக்கள் இயக்கத்தில் உழைத்திருக்கிறேன். அந்த உழைப்புக்கு தளபதியே கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது. முதல்வரின் சொல்படி இன்னும் அக்கறையோடு பொறுப்போடும் மக்களுக்காகப் பணியாற்றுவேன்" என்றார். பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/recognition-after-16-years-of-hard-work-tamil-nadu-housing-board-chairman-siva-gets-emotional




