மதுரை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (36 வயது). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி (28 வயது). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியதர்ஷினி மன வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று பிரியதர்ஷினி சேலையால் தூக்குப்போட்டு, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தாய் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அவரது மூத்த மகளான 7 வயது சிறுமி அலறினாள். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். பின்னர் உடனடியாக சந்தோஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து தனது மனைவியின் உடலை பார்த்து அழுதார். இதையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள பழைய வீட்டுக்குள் சென்றார். சற்று நேரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு சந்தோஷ் குமாரும் உயிரை மாய்த்தார். இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், தந்தையின் தற்கொலையால், 2 பெண் குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kudumba-thagaraaril-thampathi-tharkkolai-2-pen-kuzhandhaigal-parithavippu




