தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ.82.10 லட்சம் சிக்கியள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ரூ. 82,10,000 லஞ்ச பணத்தில் G-PAY மூலமாக மட்டுமே ரூ.68.32 லட்சம் லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ. 1,18,000 ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. raid தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையில், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிக பணம் கைப்பற்றப்பட்டதால், முதல் வரிசையில் கரூர் இடம் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 10-ம் தேதி கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், 'தமிழகத்தில் எந்த அரசு அலுவலகங்களிலும் இப்பொழுது லஞ்சம் என்பதே இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் என்னிடம் கூறுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று பேசியிருந்தார். இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலங்களில் தமிழகம் முழுக்க நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட லஞ்ச பணத்தில் கரூர் முதலிடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/karur-records-high-on-bribe-dvac-raid-reveals




