திண்டுக்கல், வறட்சியின் தாக்கத்தால் சந்தைகளில் தக்காளியை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை உயர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்த அளவில் வருவதால் வியாபாரிகள் தக்காளியை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். வழக்கமாக 15,000 தக்காளி பெட்டிகள் கொண்டு வந்த நிலையில் தற்போது 3000 பெட்டிகள் மட்டுமே கொண்டுவரப்படுகிறது. இதனால் முதல் ரக தக்காளி பெட்டிகள் மற்றும் இரண்டாம் ரக தக்காளி பெட்டிகள் ரூ.250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் ரக தக்காளி பெட்டிகள் ரூ.700 இரண்டாம் ரக தக்காளி பெட்டிகள் ரூ. 650 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.50 சில்லறை விலையில் ரூ.70 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வறட்சியின் காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tomato-prices-rise-due-to-drought




